I will publish the video source of the ruling party: the Attorney Arul informபொள்ளாச்சியை போன்று பெரம்பலூரிலும், வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மீண்டும் உல்லாசத்திற்கு ஆளும் கட்சி பிரமுகர் மற்றும் போலி செய்தியாளர் மிரட்டியதாக நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான அருள் புகார் தெரிவித்து ஆடியோவும் வெளியிட்டார்.
மேலும், சில வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பேரில் எவ்வித விசாரணையும் இல்லாமல் வழக்கு பதிவு செய்து வன்கொடுமை சட்டத்தின்கீழ் நேற்று முன்தினம் 30ந்தேதி இரவு கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையிலிருந்த வழக்கறிஞர் ப.அருள் இன்று பெரம்பலூர் நீதிமன்றத்தில் போலீசாரால் நேர்நிறுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி , வக்கீல் அருளை 15நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்கவும், வரும் 14ந்தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திலிருந்து ப.அருள் வேனில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டார். அப்போது வக்கீல் ப.அருள் செய்திளாளர்களிடம் தெரிவித்ததாவது :
பொய்யான குற்ற வழக்கில் என்னை கைது செய்து இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் எனது அலுவலகத்தில் உதவியாளராக பணியாளராக இருந்த பெண்
ஒருவரை அழைத்து சென்று பல்வேறு பரிசோதனைகளை செய்து, பொய்யான வாக்குறுதிகளை வாங்கி என் மீது மேலும் ஒரு புகரை தயார் செய்கிறார்கள்.
இது தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. சம்மந்தப்பட்டஇடத்திலிருந்து அனைத்து கேமராக்களும் அகற்றப்பட்டுள்ளது. அதனை நீங்கள் பாருங்கள்
நான் வெளியில் வந்து பல முக்கியமான ஆதாரங்களை வெளியிடுவேன். அப்போது அனைவரும் சிக்குவார்கள் என்று கூறினார்.
மேலும் தனியார் நட்சத்திர விடுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.