If DMK comes to Power, AIADMK’s Hold plans will be implemented: Leader MK Stalin’s speech!

பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட தி.மு.க.சார்பில் நடைபெற்ற 2021 தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க.தலைவர் மு .க .ஸ்டாலின் பேசியதாவது:

பெரம்பலூர் மாவட்டத்திற்கு காவிரி, கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம், கேந்திர வித்யாலயா, குரும்பலூர் அரசு கலைக்கல்லூரி, கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக்,
அரசு தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ), வேப்பந்தட்டையில் பருத்தி ஆராய்ச்சி மையம், மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், எம்.ஆர்.எஃப். டயர் தொழிற்சாலை.
3300 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டம், அரியலூர் சாலையில் ஒதியம் எனுமிடத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என தி.மு.க.ஆட்சியில் நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. இராசா முயற்சியால், ஜெயங்கொண்டம் முதல் சேலம் வரையில் ரயில்வே திட்டம் கொண்டு வருவதற்காக ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கி ஆய்வுப் பணிகள் நடைபெற்றது.

கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில், 2011 அ.தி.மு.க. ஆட்சியில், சிறப்பு பொருளாதார மண்டலம் அமையவுள்ள இடத்தில் விமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வருகிறது என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா விதி எண் 110 ன் கீழ் சட்டசபையில் அறிவித்தார், கிடப்பில் போட்டுவிட்டனர். பாடாலூர், இரூர் ஊராட்சிகளை உள்ளடக்கிய 110 ஏக்கர் பரப்பளவில் ஜவுளிப் பூங்கா திட்டத்தை ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். கிடப்பில் போட்டுவிட்டனர். அரசு மருத்துவக்கல்லூரி திட்டம். கிடப்பில் போட்டுவிட்டனர். கொட்டரை நீர்த்தேக்கம் பல வருடங்களாக மிகவும் மந்தமாக ஆமை வேகத்தில் வேலை நடந்து வருகிறது. கல்லாற்றில் தடுப்பணை கட்டுகிறோம் என்று கூறினார்கள். இது வரையில் கட்டவில்லை. இதனால் தற்போது பெய்யும் மழை நீர் வீனாக கடலில் கலக்கிறது. சின்னமுட்லு நீர்தேக்கம் கட்டுகிறோம் என்று கூறினார்கள். ஆனால் திட்டம் கொண்டு வரவில்லை. அரியலூர் முதல் சேலம் வரை ரயில்வே திட்டம் கொண்டு வருவதற்காக அப்போதைய மத்திய அமைச்சர் ஆ. இராசா ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். மத்திய அரசு அதிகாரிகள் திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர். அதையும் கிடப்பில் போட்டுவிட்டனர். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சிறுவாச்சூர் எனுமிடத்தில் விபத்துக்கள் அதிகளவில் நடைபெறுவதால் அங்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளதையும், இவைகள் அனைத்தும், திமுக ஆட்சிக்கு வந்த உடன், செயல்படுத்தப்படும் என பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் துணைப் பொதுச்செயலாளர் ஆ. இராசா எம். பி. மாவட்ட செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன், மாநில நிர்வாகிகள் பா. துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், வி.எஸ்.பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், ஆர்.சிவக்குமார், பட்டுச்செல்விராஜேந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.அண்ணாதுரை, நகர செயலாளர் எம்.பிரபாகரன் உள்ளிட்ட மாவட்டத்தில் 7 இடங்களில் நடைபெற்ற காணொலிக் காட்சி கூட்டத்தில் சுமார் 5000 பேர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!