If men sterilize Rs. 1100. Rs.200 / – if promoted Perambalur Collector Shri. Venkata Priya Information.

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவம், ஊரக நலப் பணிகள், மற்றும் குடும்ப நலத் துறையின் சார்பில் ஆண்களுக்கான நிரந்தர நவீன கருத்தடைக்கான நவீன வாசக்டமி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்ட மருத்துவம், ஊரக நலப்பணிகள், மற்றும் குடும்பநல துறை சார்பில் ஆண்களுக்கான நிரந்தர தழும்பில்லாத நவீன கருத்தடை பிரச்சாரம் இருவார விழாவாக நவ.21 – முதல் டிச.4 வரை நடைபெற உள்ளது. அதில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் குடும்ப நல நிரந்தர கருத்தடை சிறப்பு சிகிச்சை முகாம் நவ.28 முதல் 04 வரை நடைபெறவுள்ளது.

நவீன வாசக்டமி முறையானது எளிய முறை, புதிய முறை, தையல் இல்லை, தழும்பு இல்லை, வலி இன்றி செய்யப்படுகிறது. ஒரு சில நிமிடங்களில் செய்யப்படும். இல்லற இன்பம் குறையாது. அறுவை சிகிச்சை இல்லை, 100 சதவீதம் பாதுகாப்பானது. பக்க விளைவுகள் இல்லை, மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை, கடின உழைப்புக்கு தடை இல்லை. மேலும், நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறையை ஏற்றுக்கொள்ளும் நபருக்கு ஊக்கத்தொகையாக ரூ.1,100-ம், ஊக்குவிப்போருக்கு ரூ.200-ம் அன்றே வழங்கப்படும் என ஸ்ரீவெங்கட பிரியா என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, விளக்க கையேடு மற்றும் கைப்பிரதி ஆகியவற்றையும் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் உள்ளிட்ட மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குநர் ராஜ்மோகன், பெரம்பலூர் மாவட்ட விரிவாக்க கல்வியாளர் அசோகன், மாவட்ட குடும்ப நல செயலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!