IJK protest in Perambalur against petrol, diesel and gas price hikes and demand an end to gambling
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை அருகில், மாவட்டத் தலைவர் ஏ.வி.ஆர் ரகுபதி தலைமையில, இன்று காலை, ஐ.ஜே.கே கட்சி சார்பில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தியும், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி முழக்கங்கள் எழுப்பினர். அக்கட்சியின் பொதுச் செயலாளர் பி.ஜெயசீலன், ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் வக்கீல் ரெங்காஸ், நகரத் தலைவர் ஆர்.சி. ராமலிங்கம், மற்றும் ஒன்றிய, நகர செயலாளர்கள், மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் கட்சித் தொண்டர்கள் என திரளானார் கலந்து கொண்டனர்.