In 25 Panchayats, Integrated Medical Camps for Disabled: Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களை பெறுவதில் சிக்கல்களை களைய சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் இதர நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் 2021-2022 அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் உள்ள கிராமங்கள் வாரியாக நடத்தப்படவுள்ளது.

அதன்படி மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) வழங்கும் திட்டத்தில் விளம்பரம் – விழிப்புணர்வு நிகழ்ச்சி செய்து முகாம் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, கீழ்க்கண்ட இடங்களில் முகாம் நடைபெறவுள்ளது.

எசனை அரசு உயர்நிலைப்பள்ளியில் 15.11.2022 அன்றும், அன்னமங்கலம் ஆர்.சி.துவக்கப்பள்ளியில் 16.11.2022 அன்றும், மலையாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 17.11.2022 அன்றும், பிரம்மதேசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 18.11.2022 அன்றும், வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 22.11.2022 அன்றும், பாண்டகப்பாடி மானிய துவக்கப்பள்ளியில் 23.11.2022 அன்றும், அல்லிநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 24.11.2022 அன்றும், கீழமாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 25.11.2022 அன்றும், இரூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 29.11.2022 அன்றும், காரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 30.11.2022 அன்றும், ஜமீன் பேறையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 13.12.2022 அன்றும், மாவிலங்கை இந்து மானிய துவக்கப்பள்ளியில் 14.12.2022 அன்றும், நக்கசேலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 15.12.2022 அன்றும், அகரம்சீகூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 16.12.2022 அன்றும், கீழப்புலியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 20.12.2022 அன்றும், கிழுமத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 21.12.2022 அன்றும், ஓலைப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 22.12.2022 அன்றும், பரவாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 23.12.2022 அன்றும், சிறுமத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 27.12.2022 அன்றும், வடக்குமாதவி அரசு உயர்நிலைப்பள்ளியில் 28.12.2022 அன்றும், எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 29.12.2022 ஆகிய தேதிகளில் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது,

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பார்வைத்திறன் குறையுடையோர், செவித்திறன் குறையுடையோர், மனவளர்ச்சி குன்றியோர், உடல் இயக்க குறைபாடுடையோர் மற்றும் பல்வகை குறைபாடுடையோர் தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், (UDID Card) பதிவு செய்தல், மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் மாற்றுத் திறனாளிகளை கண்டறியும் ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமிற்கு வருகை தரவுள்ள மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை (மருத்துவ சான்றிதழுடன்) பிறப்பு சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 06 எண்ணிக்கையிலான பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை எடுத்து வருமாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!