In a government school near Perambalur, Kamaraja’s birthday is celebrated as an educational development day!

பெரம்பலூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில், காமராஜரின் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 120வது பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. பட்டிதொட்டி எங்கும் பள்ளிகள் திறந்து, ஏழை, மாணவர்களை கல்வி பயில செய்தார். மேலும், மாணவர்களுக்கு, உணவு, உடைகள், புத்தகம் வழங்கி கல்வி பயில நடவடிக்கை எடுத்தார்.

அதனால்தான் தமிழகம் இன்று முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. காமராஜரின் பணி போற்றும் வகையில் காமராஜரின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் அருகே உள்ள எசனை ஊராட்சி ஒன்றிய தெற்குப் பள்ளியில் இன்று காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு, அவரது பணிகள், தியாகம், அரசியலில் நேர்மை, பொது வாழ்வில் தூய்மை, அவரது திறமைகள், ஆளுமைத் திறன்கள் மாணவர்களுக்கு எடுத்து உரைக்கப்பட்டது.

மாணவர்களுக்கு பேச்சு, மற்றும் கட்டுரை போட்டிகள் நடந்தப்பட்டன. காமராஜரைப் போல் வேடமணிந்து மாணவர்கள் பேசியும், நடித்தும் காண்பித்தனர்.  போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.

பள்ளித் தலைமை ஆசிரியை செல்லம்மாள், ஆசிரியர்கள் தேவகுமார், புவனேஸ்வரி, செல்வி. தீபஜோதி, ப.மலர்க்கொடி மற்றும் பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் கவிதா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!