In a village near Perambalur, more than 70 people have the same name as Padaikathu!

தமிழகத்தில் அண்மைகாலமாக நவீனம் என்ற பெயரில் பிறமொழிபெயர்கள் எண் கணிதம், மற்றும் ஜாதகத்தின் அடிப்படையில் பெயர் வைத்தல் இது போல் நவீனம் நடைபோடும் இக்காலத்திலும் பெரம்பலூர் அருகே ஒரு கிராமத்தில் 70க்கும் மேற்பட்டோர்க்கு படைக்காத்து என்று ஒரே மாதிரி பெயர் வைத்து அழைத்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர்- அரியலூர் சாலையிலுள்ள பேரளி கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் (உடையார்) மட்டும் தங்கள் வீட்டில் பிறக்கும் முதல் ஆண் பிள்ளைகளுக்கு படைகாத்து என்று பெயர் சூட்டும் பாரம்பரிய நடைமுறையை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர்.

அந்த கிராமத்தில் தாத்தா, அப்பா, மகன், பேரன் என ஒரே வீட்டில் மூன்று தலைமுறையினருக்கும் படைகாத்து என்று பெயரிட்டு அழைத்து வருவதுதான் சற்று சுவாரஸ்யத்தின் உச்சம்.

ஆதர் அட்டையில் தொடங்கி, குடும்ப அட்டை,, வாக்களர் அடையாள அட்டை ,. திருமணம் உள்ளிட்டகுடும்ப விழா பத்திரிக்கைகளில் உறவுகளின் பெயர் பட்டியல் இவை மட்டுமின்றி. பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவேடுகள்வரை இந்த படைகாத்து பட்டியல் நீள்கிறது. ஊருக்குள் சென்று படைகாத்தை பார்க்க வேண்டுமென்றால் அவர்களுக்கான குறியீட்டு அடையாளமான பட்டை பெயரையோ, அல்லது அந்த நபரின் மனைவி பெயரையோ குறிப்பிட்டால் மட்டுமே தேடிச்சென்ற நபர் நமக்கு கிடைப்பார் என்ற நிலையே நீடிக்கிறது

(கருவேப்பிலை) படைகாத்து – பேரளி. ரஞ்சனி – (ஊறுகா பானை) படைகாத்து மனைவி பேரளி, இது போல் ஒரு கிராமம் முழுதும் 100-க்கும் மேற்பட்டோருக்கு படைகாத்து எனபெயர் வைத்துள்ளதற்கு காரணமாக தங்களது குலதெய்வமான படைகாத்த ஐயனாரை கை காட்டுகின்றனர் கிராமத்து மக்கள்.

குன்னம் தாலுக்கா துங்கபுரம் அருகே காடூர் கிராமத்திலுள்ள நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த படைகாத்தவர் கோயிலில் ‘உள்ள காவல் தெய்வமான படைகாத்த ஐயனாரை வணங்கும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீட்டில் முதலாவதாக பிறக்கும் ஆண்குழந்தையை கோயிலில் வைத்து அதற்கு படைகாத்து என பெயர் சூட்டும் நடைமுறையை இன்றும் கடைபிடித்து வருகின்றனர். இது போல் தங்கள் காவல்தெய்வத்தின் பெயரை வைத்தால் அந்தகுழந்தையை ஆபத்து நெருங்காது என்பது தங்களது நம்பிக்கை என்கின்றனர் கிராம மக்கள்.

பேரளி கிராமத்தில் குடும்ப விழா பத்திரிக்கைகளில் அச்சிடப்பட்டிருக்கும் படைகாத்து என்பவரின் பெயருக்கு அருகே பக்கத்தில் அச்சிடப்பட்டிருக்கும் அவர்களது மனைவியின் பெயரை வைத்தே அவர்களை கண்டறிய முடியும் என்று வியப்பூட்டும் கிராமமக்கள் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களின் வருகையை பதிவேட்டில் பதிவிடும்போது படைகாத்து பெயருள்ள. மாணவர்களின் அடைமொழியைதவறாமல் உச்சரித்தால்தான் உள்ளேன் ஐயா என்ற ஒற்றை சத்தம் வருமாம் வெறும் படைகாத்து. என்றழைத்தால் கோரஸாக சத்தம் வரும் என்கின்றனர் பேரளி பள்ளி ஆசிரியர்கள்.

இது போன்ற நடைமுறை சிக்களுக்கு தீர்வுகாண ஒரு சிலர் தற்போது படைகாத்து கோயிலில் தங்கள் பிள்ளைக்கு மொட்டையடித்து காதணி விழா நடத்தும்போது வேறு பெயர் சூட்டி அழைத்தாலும் அவை ஆவனங்களில் கையெழுத்திட மட்டும்தானாம் ஊருக்குள் அனைவரும் படைகாத்தாகவே தான் வலம் வருகின்றனர்.

பெயர் சூட்டுவதில் புதுபுது நவீனம் கையாளப்பட்டாளும் பெயருக்கு பின்னால ஜாதிய அடைமொழி போடுவதை இன்றளவும் கடைபிடித்து வரும் தமிழக கிராமங்களுக்கு மத்தியில் பேரளி கிராம ஆண்களின் படைகாத்து பட்டியல் சற்று வினோதமானது தான் என்பதை மறுப்பதற்கில்லை.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!