In Namakkal, Speech, Article, and Art Contest on behalf of SSA

நாமக்கல்லில் வட்டார வளமையம் சார்பில் பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் நடைபெற்றது.
நாமக்கல் அனைவருக்கும் கல்வி இயக்கம் (சர்வ சிக்ஷ அபிநயன்) வட்டார வளமையம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில் பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் சுத்தம் சுகாதாரம் சார்ந்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வட்டார அளவில் பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் நாமக்கல் வட்டார வளமையத்தில் நடைபெற்றது. போட்டிகளை வட்டார வளமைய மேற்பார்வையளர் (பொ) சுப்ரமணியன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
பள்ளி அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவியர்கள் இப்போட்டி பங்கேற்றனர். இதில் ஒன்றாம் வகுப்பு முதல் 3 ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர்களுக்கு ஒவியப் போட்டியும், 4 மற்றும் 5 ம் வகுப்பு மாணவ, மாணவியர்கு பேச்சு போட்டியும், 6 ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியாக பேச்சு, கட்டுரை மற்றும் ஒவியப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இப் போட்டிகளில் 90 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.ஒன்றாம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை உள்ள தொடக்க நிலை வகுப்புகளுக்கு முதல் பரிசு ரூ. 900ம், இரண்டாம் பரிசு ரூ. 750, மூன்றாம் பரிசு ரூ. 600 உயர் தொடக்க நிலைவகுப்புகளுக்கு முதல் பரிசு ரூ. ஆயிரத்து 200, இரண்டாம் பரிசு ரூ. ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ. 800 வழங்கப்பட உள்ளது. வட்டார அளவில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பெறும் மாணவ, மாணவியர்களை மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.