In Perambalur, Chief Minister M. K. Stalin, who walked about 100 meters and received petitions from the people!

பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு புறப்பட்ட, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த பொதுமக்களை பார்த்தவுடன் நடந்தே சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். 100 மீட்டர் தூரம் நடந்து சென்று பெண்கள், குழந்தைகள், கட்சியினர் என்று அனைவரையும் பாரத்து புன்முறுவலுடன் கை குலுக்கி பேசினார்.

திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.இராசா. எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம். தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வெ.கணேசன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் , பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், வி.எஸ்.பெரியசமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில் சன்.சம்பத், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், அழகு.நீலமேகம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் அரியலூர் செல்கையில் துறைமங்கலம், 4 ரோடு, கவுள்பாளையம்,பேரளி ஆகிய இடங்களில் ஆண்களும், பெண்களும் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். குன்னம் கிராமத்தில் பொதுமக்கள் கூட்டத்தை பார்த்த முதலமைச்சர் அவர்கள் மெதுவாக ஊர்ந்து சென்று மக்களை பார்த்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அங்கு திரண்டிருந்த பெண்கள் ஆர்வமுடன் கையசைத்து உற்சாகத்தில் மிதந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!