In Perambalur, Collector (incharge) Rajendran inaugurated 6 electricity buildings worth Rs. 2.78 crore in the presence of MLAs.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், பெரம்பலூரில் ரூ.2.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 6 கட்டிடங்களை கலெக்டர் (பொ) ராஜேந்திரன் எம்.எல்.ஏக்கள் ஆர்.டி.ராமச்சந்திரன் (குன்னம்), தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்) ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.

பெரம்பலூரில் சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வரும் மின்வாரிய அலுவலகத்தில், புதியதாக ரூ.48.00 லட்சம் மதிப்பீட்டில் செயற்பொறியாளர் மின் அளவி சோதனை கூட அலுவலகமும், ரூ.48.00 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு பராமரிப்பு ஆய்வு கூடமும், ரூ.48.00 லட்சம் மதிப்பீட்டில் மின் அளவி ஆய்வகம் மற்றும் உதவி பொறியாளர் அலுவலகம், ரூ.40.00 லட்சம் மதிப்பீட்டில் மத்திய பண்டகசாலை மற்றும் பிரிவு அலுவலகமும், ரூ.46.00 லட்சம் மதிப்பீட்டில் மத்திய பண்டகசாலை துணைப் பிரிவு அலுவலகங்களும், ரூ.48.00 லட்சம் மதிப்பீட்டில் தொழிற்சங்க அலுவலக கட்டிடங்களும் என மொத்தம் 6 கட்டிடங்கள் ரூ.2.78 கோடி மதிப்பீட்டில் திறந்து வைக்கப்பட்டது.

இதன் மூலம், இதுவரை திருச்சியில் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகள் இனிவரும் காலங்களில் பெரம்பலூர் நகரில் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன்மூலம் பழுதான மின் மாற்றிகள் காலதாமதமின்றி உடனுக்குடன் சரி செய்யப்பட்டு எந்தவித தாமதமுமின்றி நுகர்வோர்களுக்கு தடையில்லா மின் வினியோகம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. மின்வாரிய பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!