In Perambalur, distribution of Manu Smriti book to women on behalf of VCK
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், இன்று மாவட்ட விசிக மாவட்ட செயலாளர் சி.தமிழ்மாணிக்கம் தலைமையில், பெண்களை கேவலமாகவும், அடிமைகளாகவும் எழுதியுள்ளதாக கூறப்படும் மனு ஸ்மிருதி புத்தகத்தை பொதுமக்களுக்கு வழங்கினர். கட்சி பிரமுகர் வீர.செங்கோலன் உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட, மண்டல, மாநில, நகர, பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.