In Perambalur district, differently abled need to link Aadhaar to get stipend!
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாதாந்திர உதவித் தொகை ரூ.2,000 பெறும் மன வளர்ச்சி குன்றியோர், கடுமையாக பாதிக்கப்பட்டோர், தொழு நோய் பாதித்தோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் முதுகு தண்டு வடம் பாதித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இனி வரும் காலங்களில் மாதாந்திர உதவித்தொகை தொடர்ந்து பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையுடன் கட்டாயம் இணைக்க வேண்டும்.
இது நாள் வரை இணைக்காத மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் சென்று இணைப்பதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 23.12.2022 க்குள் தங்களது ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டுமென மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தெரிவித்துள்ளார்.