In Perambalur district, heroes can apply for Jeevan Raksha Award!

Pic Credit: India.com
பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்கள், தீ விபத்துக்கள், நிலச்சரிவு, விலங்கினை தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு கீழ்க்காணும் பிரிவுகளில் “ஜீவன் ரக்ஷா விருதுகள் வழங்கி வருகிறது.
சர்வோத்தம் “ஜீவன் ரக்ஷா” விருது மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. அதன்படி 2020-ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் செப்.15 க்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகக்தில் 3 நகல்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும், என தெரிவித்துள்ளார்.