In Perambalur, gold jewelry was stolen from a woman who was on a bus!

Model
பெரம்பலூரில் நேற்றிரவு அரசுப் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்றவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் நான்கு ரோடு, அருகே உள்ள சிலோன் காலனியைச் சேர்ந்தவர் சிவமணி மனைவி பூங்கொடி (37). இவர், தனது உறவினரின் திருமணத்துக்குச் செல்வதற்காக செல்லியம்பாளையத்தில் உள்ள தனது அக்கா செல்லம் (42) என்பவரிடம் 5 பவுன் தங்க நகையை வாங்கி வந்துள்ளார்.
பழைய பேருந்து நிலையத்திலிருந்து வேப்பூருக்குச் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறி புறநகர் பேருந்து நிலையதுக்கு சென்றுள்ளார். அப்போது, தனது கையில் வைத்திருந்த பையை மர்ம நபர்கள் கத்தியால் கிழித்து, அதிலிருந்த 5 பவுன் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை அடையாளம் பணியில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விளம்பரம்:












kaalaimalar2@gmail.com |
9003770497