In Perambalur, government officials accepted a pledge to launch a serious public campaign against corona eradication.In Perambalur, government officials accepted a pledge to launch a serious public campaign against corona eradication.

பெரம்பலூர் கலெக்டர் ஆபிசில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பொதுமக்களிடையே தீவிர பிரச்சாரம் மேற்கொள்வதற்கான உறுதிமொழியினை
கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் இன்று அரசு அலுவலர;கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது, கலெக்டர் தெரிவித்ததாவது:

கொரோனா வைரசுக்கு எதிராக முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் கடைபிடிக்கச் செய்திட வேண்டும் என அரசு அலுவலர்கள் உறுதி மொழி எடுத்து செயல்பட வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி எல்லா நேரங்களிலும் விழிப்புடன் இருக்கவும், மனதில் நிறுத்திக்கொள்ளவும் உறுதியளிக்கிறேன். கொரோனா வைரசிலிருந்து எனக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் ஆபத்தான இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பதாக நான் உறுதியளிக்கிறேன். முக்கியமாக கொரோனா வைரசுக்கு பொருத்தமான பின்வரும் நடத்தைகளை பின்பற்ற, மற்றவர்களையும் ஊக்குவிப்பதாக நான் உறுதியளிக்கிறேன்.

அவை எப்போதும் பொது இடங்களில் இருக்கும்போது கட்டாய முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் எனவும், மற்றவர்களிடமிருந்து குறைந்தது 6அடி இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும் கைகளை அடிக்கடி முழுமையாக சோப்பு போட்டுகழுவ வேண்டும் என உறுதியளிக்கிறேன். மேலும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. சமூக இடைவெளியை தவறாது கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!