In Perambalur, lorry-two-wheeler collision: Electrical board assistant engineer killed: Another electrical assistant engineer injured

பெரம்பலூர் அருகே உள்ள அனுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியன் மகன் ராமதாஸ்(40). சென்னை வடக்கு மின் வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்த இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து விட்டு இன்று மீண்டும், பேருந்தில் சென்னை செல்வதற்காக உறவினரும், செட்டிகுளம் மின் வாரிய உதவி பொறியாளருமான பிரபு(37), என்பவரை அழைத்து கொண்டு, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த போது பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா என்ற இடத்தில் பின்னால் வந்த டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானார்.

இந்த விபத்தில் ராமதாஸ் மற்றும் பிரபு ஆகிய இருவரும் நிலை தடுமாறி டிப்பர் லாரியின் முன் மற்றும் பின்புற சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்து, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் ராமதாஸ் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரபு படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவில சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் விபத்துக்கு காரணமான டிப்பர் லாரியை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (54), என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுமுறையில் சொந்த ஊர் வந்து விட்டு, மீண்டும் பணிக்கு செல்வதற்காக தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த போது விபத்துக்குள்ளாகி மின் வாரிய உதவி பொறியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தார் உள்ளிட்ட உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே விபத்து நிகழ்ந்த பகுதி அருகில் உள்ள இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் டூவீலர் மீது டிப்பர் லாரி மோதி, ராமதாஸ்-பிரபு ஆகியோர் மீது டயர் ஏறி இறங்கும் பதை பதைக்கும் வீடியோ காட்சி பதிவுகள் வெளியாகியுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!