In Perambalur, National lok adalat: 81 cases settled; Rs. 2 crore 82 lakh 59 thousand solution

 

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி எஸ். சுபாதேவி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி ஜி.கருணாநிதி, மகிளா நீதிபதி எஸ். கிரி, குடும்ப நல நீதிமன்றத்தின் நீதிபதி. ஏ.தனசேகரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி எம். வினோதா, சார்பு நீதிபதி எல். ஷகிலா, நீதித்துறை நடுவர்கள் ஜி. அசோக்பிரசாத், சி. கருப்பசாமி, மாவட்ட உரிமையியல் நீதிபதி எம். ரவிச்சந்திரன் மற்றும் வேப்பந்தட்டை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி டி.செந்தில்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையிலுள்ள வழக்குகளில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி சார்ந்த பணபரிவர்த்தனை வழக்குகள், சொத்து சம்மந்தமான சிவில் வழக்குகள் மற்றும் சிறு அளவிலான குற்றவியல் வழக்குகள் என ரூ. 2 கோடியே 82 இலட்சத்து 59 ஆயிரத்து 307 மதிப்பில் மொத்தம் 81 வழக்குகள் சமரசமாக பேசி தீர்வு காணப்பட்டன. இருபால் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 223 பயனாளிகள் பயனடைந்தனர். இந்நிகழ்வினை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சுபாதேவி, வாகன விபத்து வழக்கு ஒன்றில் பயனாளி ஒருவருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 11 லட்சத்து 75 ஆயிரத்திற்கான உத்தரவை வழங்கினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!