In Perambalur near the cell phone tower atop the worker threatened to commit suicide

பெரம்பலூர் அருகே தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் மீது ஏறி, கூலித் தொழிலாளி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

cell-phone-tower பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அத்தியூர் கிராமத்தை சேர்ந்த நடேசன் மகன் செல்வம்(35), விவசாய கூலித்தொழிலாளியான இவர் இந்திரா காந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சம் மதிப்பில் வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டிற்கு முதல் மற்றும் இரண்டு தவனையாக சிமெண்ட் மூட்டைகள் உட்பட ரூ. 33 ஆயிரத்து 266 ரொக்கம் உள்பட வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தான் கட்டி வரும் வீட்டிற்கு பாக்கித் தொகையை ஊராட்சி மன்ற தலைவரும் மற்றும் ஊராட்சி செயலாளரும் தர மறுப்பதாக கூறிய செல்வம் நேற்று காலை திடீரென தன் வீட்டின் அருகில் உள்ள தனியார் செல்போன் டவர் மீது ஏறி நான் குதித்து சாவ போவதாக கூறினார் செல்வத்திற்கு கல்யாணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளனர் சம்பவ இடத்திற்கு செல்வத்தின் மனைவி மற்றும் குழந்தைகள் ஊர் பொதுமக்கள் கூடி கூக்குரலிட்டனர்.

பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் மதியழகன் உத்தரவின் பேரில் வேப்பூர் தீயணைப்பு அலுவலர் ராமசாமி மற்றும் மங்களமேடு இன்ஸ்பெக்டர் தங்கவேல் வேப்பூர் திட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட செல்வத்திடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்.

பின்னர், செல்வம் மகள் லத்திகாவிடம் பணம் எடுக்கும் சலானை கொடுத்து விட்டனர் , என்று இறங்கி வருமாறு தெரிவித்ததை அடுத்து லத்திகா அழைத்ததன் பேரில் செல்வம் கீழே வர சம்மதித்தார் உடனே தீயணைப்பு வீரர்கள் மேலே சென்று மயங்கிய நிலையில் இருந்த செல்வத்தை கயிறு கட்டி பத்திரமாக கீழே கொண்டு வந்தனர்.

அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி மீதி பாக்கி தொகையை தருவதாக உறுதி அளித்தனர். இதனால் போராட்டத்தை கைவிட்ட செல்வத்தை, அத்தியூர் ஆரம்ப சுகாதா நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் பெரும் பரபரப்பு காணபட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!