In Perambalur, police have set up high towers at key places during the Deepavali festival
பெரம்பலூர் போலீசார் தீபாவளி பண்டிகை முன்னிட்டு, பொதுமக்கள் பண்டிகை கொண்டாட தேவையான பொருட்கள் வாங்க நகரங்களிலும், முக்கிய இடங்களிலும் அதிகமாக கூடுவதால் அங்கு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, போலீசார் உயர் கோபுரங்கள் அமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் அதிகப்படியான நகைகளை அணிந்து வர வேண்டாம் எனவும், தெரியாத நபர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏதேனும் இனிப்பு கொடுத்தால் அதனை சாப்பிட வேண்டாம் எனவும், பேருந்தில் பயணம் செய்யும் போது தங்களது உடைமைகளை கையில் பாதுகாப்பாக வைத்து கொள்ளுமாறும்,
அவசர உதவி மற்றும் பாதுகாப்பிற்கு பொதுமக்கள் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 தொடர்பு கொள்ளவும், தீபாவளி பண்டிகையானது பொதுமக்கள் எவ்வித அச்சமின்றியும், குற்றமில்லாத பண்டிகையாக கொண்டாட போலீசார் சார்பில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், பொது மக்கள் நமது காவல்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்










kaalaimalar2@gmail.com |
9003770497