In Perambalur, the lock of the house was broken and jewelry and money were stolen!
பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வெங்கடாஜலபதி நகரை சேர்ந்தவர் தாமோதரன் (51), சென்னையில் தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
வாடகைக்கு வசித்து வருகிறார். அவரது மனைவி சரஸ்வதிக்கு சிகிச்சை செய்ய கடந்த 10ம் தேதி சென்னைக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் இன்று காலை அருகே வசிக்கும் வீட்டின் உரிமையாளர் வந்த பார்த்த போது, தாமோதரன் குடியிருக்கும் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
தாமோதரனின் தம்பி கரிகாலன் (48) வந்து பார்த்தபோது பீரோவைக் கீழே தள்ளி உடைத்து, அதிலிருந்த நகைகள் ரொக்கம் ரூ.10ஆயிரம், 9 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணம் பணியில் ஈடுபட்டுள்ளனர்.