In Perambalur, the police tracked down the robbers who lifted the cash locker at a popular furniture store.

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் வசந்த் & கோ நிறுவனத்தின் கிளை இயங்கி வருகிறது. பணியாளர் சதீஷ் கடந்த 26ம் தேதி காலை கடையை திறப்பதற்காக வந்து பார்த்த போது கடையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு, கிடந்ததை கண்டு, அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தடய அறிவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி, கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
விசாரணையில், கொள்ளையர்கள் கடையின் உள்ள இருந்த சுமார் 150 கிலோ எடையுள்ள லாக்கரை எடுத்து சென்று அதில் இருந்த ரூ.3லட்சத்து 36 ஆயிரத்தை எடுத்து சென்றனர்.
கடையின் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து, எஸ்.ஐ. மணிகண்டன் தலைமையிலான தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மலையனூரை சேர்ந்த கோவிந்தன் மகன் மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளி ஒருவரும் திருடியதும் தெரிய வந்நது. பின்னர், இன்று காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், கடையின் கல்லாப்பெட்டி (லாக்கரை ) பெரம்பலூர் நீதிமன்றத்திற்கு பின்புறம் உள்ள பாழும் கிணற்றி வீசி சென்றது தெரியவந்தது. மேலும், அவர்களிடம், ரூ. 1 லட்சத்து 70 ஆயிரத்தையும் மோட்டர் சைக்கிள் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.