In Perambalur, the woman who went to the walking 6 pawn stampede

கற்பனை காட்சி
பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் உப்போடை பகுதியில் இன்று காலை, நடை பயிற்சி சென்ற பெண்ணிடம் 6 பவுன் தாலிக்கொடி பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள ரோஸ் நகரைச் சேர்ந்த கணேசன் மனைவி அரசு (வயது 60), என்பவர் தினமும் அப்பகுதியில நடைபயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். வழக்கம் போல் இன்று காலையும் அவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் உப்போடை பாலம் அருகே சென்று திரும்பும் போது, நோட்டமிட்ட மர்ம நபர் அவர் அணிந்து இருந்த 6 பவுன் தாலிக்கொடி திடீரென பறிக்க முயன்றார். இதை தடுக்க அரசும் போராடினார். ஆனால், கொள்ளையனுடன் போராட முடியவில்லை. இதில் தங்க தாலிக்கொடியை பிய்த்த மர்ம நபர் அறுத்துக் கொண்டு உப்போடை பாலத்தில் இருந்து குதித்து தப்பிக்க ஓடினார். இந்நிலையில், அரசு கொள்ளையனை பிடிக்க கூக்குரலிட்டார். இதை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்ற பிடிக்க முயற்சித்தனர். இதற்கு கொள்ளையன் தயராக நின்று கொண்டிருந்த மர்ம மனிதனின் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பினான். கழுத்தில் காயமடைந்த அரசு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்ட, பின்னர், பெரம்பலூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையார்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தனியாகவும், நடந்து செல்லும் பெண்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.