in-perambalur-two-girls-missing-from-the-hotel-guardian-at-the-police-station-to-complain
பெரம்பலூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த மாயமானது குறித்து தனியார் விடுதிக் காப்பாளர் காவல் புகார் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த மாயமானது குறித்து தனியார் விடுதிக் காப்பாளர் காவல் புகார் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் இளம் வயது திருணமங்கள் தடுத்து நிறுத்தும் போது, பெரம்பலூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான விடுதியில் தங்க வைக்கப்படுவது வழக்கம்.
இதே போன்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இளம் சிறார் திருமணங்களில் தடுத்து நிறுத்தப்பட்ட சிறுமிகளான கடம்பூரை சேர்ந்த ஒரு சிறுமியும், அய்யலூரை சேர்ந்த சிறுமி இருவரும் பெரம்பலூர் நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு விடுதியில் தங்கியிருந்த சிறுமிகள் சுவர் ஏறி குதித்து, தப்பித்து சென்றுள்ளனர். இது குறித்து விடுதிக் காப்பாளர் உமாமகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்து தீவிரமாக தப்பி சென்ற சிறுமிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.