In Perambalur venture near: Rs 12 lakh, 50 sovereing of jewelery robbery
பெரம்பலூர் அருகே நள்ளிரவு நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து 50 பவுன் தங்க நகை மற்றும் 12 லட்ச ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிரவன்(வயது 31), இவர் அதே ஊரில் தனது வீட்டின் முன் பகுதியில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு விற்பனையை முடித்த பின்பு கதிரவன் வழக்கம் போல் மெடிக்கல் கடையை பூட்டி விட்டு பின் பகுதியிலுள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் தூங்க சென்று விட்மார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை வழக்கம் போல் வாசலை பெருக்குவதற்காக கதிரவனின் மனைவி கவிதா வந்து பார்த்த போது மெடிக்கல் கடையின் ஷட்டரில் பூட்டிய பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை அறிந்து கூச்சலிட்டுள்ளார்.
கவிதாவின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த கதிரவன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து பார்த்த போது மெடிக்கல் கடையின் உள்ளே சென்டிமென்டாக டேபிள் லாக்கரில் வீட்டுமனை வாங்குவதற்காக உறவினர்களிடம் கடனாக வாங்கி வந்த 12 லட்ச ரூபாய் ரொக்க பணம், 50 பவுன் தங்க நகைகள் திருடு போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இது தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு டி.எஸ்பி.,ஜவஹர்லால் தலைமையில் தடய அறிவியியல் நிபுணர்கள் மற்றும் துப்பறியும் நாயுடன் சென்று திருட்டு சம்பவம் நடந்த மெடிக்கல் கடையை ஆய்வு செய்து கை ரேகை மற்றும் தடையங்களை சேகரித்து, இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல்,அன்புச்செல்வன் ஆகியோர் தலைமையில் கொள்ளை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நள்ளிரவு நேரத்தில் நிகழ்ந்த திருட்டு சம்பவம் கீழப்புலியூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொது மக்களை பெரும் பீதி அடைய செய்துள்ளது.