In POCSO case, imprisonment till natural death of the offender: Rs. 1 lakh fine – Perambalur District Magistrate Court Verdict!
பெரம்பலூர் அருகே உள்ள நெடுவாசல் நடுத்தெருவை சேர்ந்த சரவணன் (50), அதே கிராமத்தை சேர்ந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக மருவத்தூர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் கடந்த 2020-ம் ஆண்டு போக்சோ சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கின் குற்ற இறுதி அறிக்கை பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை முடித்து மகிளா நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரவேல் இன்று, குற்றத்தை உறுதி செய்து, குற்றவாளிக்கு இயற்கை மரணம் அடையும் வரை சிறை தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும், அபராதத் தொகையினை கட்டத் தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசிடமிருந்து 6 லட்ச ரூபாய் நிவாரணமாக பெற்றுத்தற உத்தரவிட்டார்.
குற்றவாளி சரவணனை, நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் சிறையில் அடைத்தனர்.
விளம்பரம்: