After 100 years, Poolampadi Dharmaraja – Thirupadiyamman temple consecrate is happening on July 6th with the help of international businessman DATO. PRAKADEESH KUMAR MD., PLUS MAX Group of Companies


பூ

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி பேரூரில், சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மானம் செய்யப்பட்ட தர்மராஜா – திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, குடமுழுக்கு விழா செய்யப்பட்டது. அதன் பின்னர், கோவில் போதுமான பாராமரிப்பு பணிகள் இல்லாமல், சிதிலமடைந்து வந்தது. இதனை தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் பொதுமக்கள் கோவிலை சீரமைக்க முடிவு செய்தனர்.

அதன் பிறகு தொழிலதிபர் டத்தோ.பிரகதீஷ் குமார் உதவியுடன் திரவுபதி அம்மன் கோவில், ராஜகோபுரம், செல்வ விநாயகர் கோவில், தர்மராஜா சுவாமி கோவில், ஸ்ரீ அரவான் சுவாமி கோவில், போத்த ராஜா சுவாமி கோவில், கிருஷ்ணர் கோவில், பலி பீடம் மற்றும் கொடி மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வேலைபாடுகளுடன் கோவில் திருப்பணி நடைபெற்றது.

வரும் ஜுலை 6ந் தேதி புதன்கிழமை அதிகாலை 4 ம் கால பூஜை, பூர்ணாஹூதி, கும்பங்கள் புறப்பாடு ஆகியவைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேக புனிதநீர் ஊற்றும் நிகழ்ச்சி காலை 6.45 முதல் 7.25 மணிக்குள் தொழிலதிபர் பிரகதீஷ் குமார் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற உள்ளது. தொடர்ந்து சுவாமிகளுக்கு தீப ஆராதனை நடைபெறுகிறது.

திருப்பணிகள் நிறைவு பெற்றதையொட்டி வ இன்று இளங்காளியம்மன் சக்தி அழைக்கும் இடத்திலிருந்து 126 தீர்த்த குடங்கள் மற்றும் 251 முளைப்பாறிகளை பக்தர்கள் எடுத்துக் கொண்டு மங்கள இசையுடன் யாகசாலைக்கு வந்தனர். அதனை தொடர்ந்து யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது. 5 ந் தேதி செவ்வாய்க்கிழமை 2 ம் கால பூஜை, 3 ம் கால பூஜை நடைபெறுகிறது. மேலும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பூலாம்பாடி பகுதியில் 6 இடங்களில் அன்னதானம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தொழிலதிபர் பிரகதீஷ் குமார் மற்றும் கிராம பொதுமக்கள், கோவலில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!