Incentive amount of Rs. 2500 for vegetable cultivators in Perambalur district – Government of Tamil Nadu

காய்கறி பயிர் சாகுபடியை (கத்திரி, தக்காளி, வெண்டை, வெங்காயம், கீரை வகைகள், முருங்கை, முள்ளங்கி, அவரை, கொடி வகை காய்கறிகள்) ஊக்குவிக்க பெரம்பலூர் தோட்டக்கலைத் துறைக்கு தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் ரூ.50.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைப்பருவ காய்கறி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, ஒரு எக்டேருக்கு ரூ.2500- வீதம் ஊக்கத் தொகையாக அதிக பட்சம் 2 எக்டேருக்கு மானியம் பெறலாம்.

இந்த திட்டங்களில் பயன்பெறுவதற்கு காய்கறி விதை வாங்கியதற்கான பட்டியல், ஆதார் நகல், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஏற்கனவே காய்கறி சாகுபடி செய்ததற்கான அடங்கல், கணினி சிட்டா மற்றும் 2 எண்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ, அல்லது ஆலத்தூர் வட்டாரத்தில் 8838448116, பெரம்பலூர் வட்டாரத்தில் 9786377886, வேப்பந்தட்டை வட்டாரத்தில் 6379246587, வேப்பூர் வட்டாரத்தில் 9500567619 தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!