Individual Candidates appearing for Public Examination can apply: Perambalur CEO Information!
பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
மார்ச்/ஏப்ரல் 2023- இல் நடைபெறவுள்ள 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவுள்ள தனித்தேர்வர்கள் ஆன்-லைன் வழியாக விண்ணப்பிக்க 26.12.2022 முதல் 03.01.2023 வரையிலான நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் எனவும், மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தட்கல்) 05.01.2023 முதல் 07.01.2023 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தனித்தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட தனித்தேர்வர்கள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித தோம்னிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஆலத்தூர் மற்றும் வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட தனித்தேர்வர்கள் பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பேரளி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.