Input subsidy to encourage fish farming in multi-purpose farms : Perambalur Collector Info!

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சிததலைவரை தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு பெற்ற மீனவ விவசாயிகள், சொந்த நிலத்தில் 250 முதல் 1000 ச.மீ அளவிலுள்ள பல்நோக்கு பண்ணைக்குடடைகளில் மீன்வளர்ப்பினை மேற்கொள்ள ஏதுவாக மீன்குஞ்சு, மீன்தீவனம், உரங்கள் ஆகிய மீன் வளர்ப்பிற்கான உள்ளீட்டு பொருள்கள் மற்றும் பறவை வேலி அமைத்தல் ஆகியவற்றிற்கு ஒரு அலகிற்கு ஆகும் செலவினமான ரூ.36,000- ல் 50 சதவீதம் மானியத்தில் ஒரு பண்ணைக்குட்டைக்கு ரூ.18,000 மானியத்தொகை வழங்கப்படும்.

மேற்கண்ட மானியத்தொகையானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அரியலூர் மற்றும் பெரம்பலூர் (இருப்பு) அரியலூர், அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பத்தினை 31.08.2022-க்குள் கீழ்கண்ட அலுவலக முகவரிகளில் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அலுவலக முகவரி: உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை, அரியலூர் அலுவலகம், அறை எண்.234/2வது மேல்தளம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், அரியலூர்-621704. தொலைபேசி எண்.04329–228699.

பெரம்பலூர் மீன்வள ஆய்வாளர் அலுவலக முகவரி: ஆய்வாளர், மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை, பெரம்பலூர் அலுவலகம், SKS காம்ப்ளக்ஸ், மேல்தளம், பெரம்பலூர் – 621212, தொலைபேசி எண்.04329–228699,அலைபேசி எண்.6381344399.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!