Integrated Medical Camps for Disabled Persons covering all disciplines: Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெறுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் இதர நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்கள் வாரியாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டங்களில் நடைபெற உள்ளது

பெரம்பலூர் வட்டத்தில் வேலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 15.07.2022 அன்று காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், பொம்மனப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 19.07.2022 அன்று காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், கவுள்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 20.07.2022 அன்று காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், கோனேரிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 21.07.2022 அன்று காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

வேப்பந்தட்டை வட்டத்தில் தேவையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 22.07.2022 அன்று காலை 9.00 மணி முதல் 2.00 மணிவரையிலும், கை.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 26.07.2022 அன்று காலை 9.00மணி முதல் 2.00 மணி வரையிலும், பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 27.07.2022 அன்று காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 28.07.2022 அன்று காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், வெண்பாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 29.07.2022 அன்று காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 02.08.2022 அன்று காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!