International Day for the Elimination of Violence against Women Awareness Rally: Collector Venkatapriya inaugurated at Perambalur.



சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியினை பெரம்பலூர் பாலக்கரையில், கலெக்டர் வெங்கடபிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் கலெக்டர் நுழைவு வாயிலில், இன்று காலை, தொடங்கிய பேரணி, வெங்கடேசபுரம், மதனகோபாலபுரம், சங்கு, காமராஜர் வளைவு வழியாக சென்று தாலுகா அலுவகத்தில் முடிவடைந்தது. முன்னதாக பேரணியில் கலந்து கொண்ட அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அதில், மகளாக இருந்தாலும் சரி, மகனாக இருந்தாலும், இருவரது
பிறந்த நாளை கொண்டாடுவோம். மகள் மற்றும் மகன் இருவருக்கும் சமமான கல்வி மற்றும் வளர்ச்சிக்கு சம வாய்ப்பு கொடுப்போம், குழந்தைத் திருமணம் மற்றும் கட்டாயத் திருமண வன்முறை ஆகியவற்றை ஒன்றாக எதிர்ப்போம், பெண்களையும், இளம் பெண்களையும் மதிக்க மகன்களுக்கு கற்பிப்போம், பெண்களுக்கு எதிரான ஒவ்வொரு வன்முறையை எதிர்ப்போம்,
வன்முறையில் இருந்து மீண்டவர்களுக்கு நீதி கிடைக்க எந்த ஒரு வாய்ப்பையும் விட்டுவிடமாட்டோம், வன்முறையில் இருந்து மீண்ட ஒவ்வொருவரையும், கண்ணியத்துடன் பாதுகாப்போம்
வன்முறையில் இருந்து மீண்டவர்களது கதையை வைத்திருப்போம், நாங்கள் ஒருபோதும் சட்டத்தை எங்கள் கைகளில் எடுக்க மாட்டோம், ஒவ்வொரு வீட்டிற்கும் கிராமத்திற்கும்
அமைதி ஒற்றுமையின் செய்தியை பரப்புவோம், மகள்கள் மற்றும் மகன்களுக்கு சமமான சொத்து வழங்குவோம், நலிந்தவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் ஆதரவளிப்போம் என உறுதி மொழி கலெக்டர் தலைமையில் எடுத்துக் கொண்டனர். மாவட்ட திமுக செயலாளரும், மாவட்ட ஊராட்சி சேர்மனுமான குன்னம். சி.ராஜேந்திரன், சமூக நல அலுவலர் ரவிபாலா, பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் (பொ) செல்வராசன் உள்ளிட்ட மகளிர் திட்ட அலுவலர்கள், ஏராளமான பல்வேறு கிராமங்களை பெண்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!