Jacto-Geo demonstration demanding a separate law to provide job security to teachers
ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கும் வகையில், தனிச் சட்டம் உருவாக்க வலியுறுத்தி நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் பார்க் ரோட்டில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரபிரசாத் தலைமை வகித்தார்.
இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் கண்ணன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு தனி பணிப் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் ராமு, செல்வராஜ், தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலாளர் முருகசெல்வராசன் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.