Jacto-Geo fedaration to picket the road block, police argument: scuffle
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய நடைமுறைப்படுத்த வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், 8வது ஊதிய குழு அறிக்கை வெளியிட வேண்டும்.
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பாலக்கரை பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்நுழைவு வாயில் முன்பு ஜாக்டோ-ஜியோ கூட்மைப்பினர் 200&க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்து, மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து டிஎஸ்பி., ஜவஹர்லால் தலைமையிலான போலீசார் மறியலை கைவிட வலியுறுத்தினர். இதனால் போலீசாருக்கும், ஜாக்டோஜியோ கூட்டமைப்பினருக்கும் இடையே வாக்கு வாதமும் ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கைது செய்வதாக கூறி போலீசார் கையை பிடித்து இழுத்ததால் ஆத்திரமடைந்த ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் காவல்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதனால் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 64 பெண்கள் உட்பட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பை சேர்ந்த 179க்கும் மேற்ப்பட்டோரை போலீசார் கைது செய்து பாலக்கரை பகுதியிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவித்தனர்.