Jaggi Vasudeva numerous families were affected by: kolattuar Mani charge in perambalur
ஈஷா மையத்தை நடத்தி வரும் ஜக்கி வாசுதேவால் ஏராளமான குடும்பங்களும் காட்டு விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற கொளத்தூர் மணி செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்ததாவது,
மகாராஷ்டிர மாநிலத்தைப் போல் தமிழ்நாட்டிலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினார். ஈஷா மையத்தின் ஜக்கிவாசுதேவால் ஏராளமான இளம் பெண்கள் மற்றும் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஜக்கி வாசுதேவ் காட்டுப்பகுதியில் நூறு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து ஆசிரமம் கட்டியதால் பாதிக்கப்பட்ட விலங்குகள் ஊருக்குள் வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.