Jayanthi Festival: Namakkal Sri Anjaneya on the 5th of the month: 1,00,008 in the Vada Mala
நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகிற 5ம் தேதி 1 லட்சத்து 8 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு அபிசேம் நடைபெறுகிறது.இதனை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோவிலில் வடை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நாமக்கல் கோட்டையில் புரான சிறப்புப் பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் உருவான 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு வருகிற 5ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற உள்ளது. 11 மணிக்கு சிறப்பு அபிசேகம், மதியம் 1 மணிக்கு தங்க கவசம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெறும்.
இதையொட்டி ஒரு லட்சத்து 8 வடை தயாரிக்கும் பணி அருள்மிகு ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் கடந்த 1ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக ஸ்ரீரங்கத்தில் இரந்து 32 பேர் கொண்ட குழுவினர் நாமக்கல் வந்து, வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் மடப்பள்ளியை சேர்ந்த ரமேஷ் தெரிவித்ததாவது:
ஆஞ்சநேயர் ஜெயந்திக்காக ஒரு லட்சத்து 8 வடை தயாரிப்பதற்கு 2,250 கிலோ உளுத்தம் மாவு பயன்படுத்தப்படுகிறது. 650 கிலோ நல்லெண்ணெய், 35 கிலோ சீரகம் மற்றும் 35 கிலோ மிளகு, 35 கிலோ உப்பு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.
மொத்தம் 18 அடுப்புகள் அமைத்து வடை தயாரிக்கப்படுகிறது. தினசரி காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இந்தப்பணி நடைபெறுகிறது. வடைகள் தயாரிக்கப்பட்டு நூல்கயிற்றில் கோர்க்கப்பட்டு 5ம் தேதி அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சார்த்தப்படும்.