Kabir Award; To apply, call the Perambalur Collector

பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தரும் வகையில் சமுதாய நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஆண்டு தோறும் குடியரசு தினத்தன்று தமிழ்நாடு முதலமைச்சரால் கபீர் புரஸ்கார் விருது வழங்கி வருகிறது.

அதன்படி 2020 ஆம் ஆண்டிற்கு கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்காணும் விருதிற்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தள முகவரியான www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கலெக்டர் பரிந்துரை பெற வேண்டியுள்ளதால், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், விளையாட்டு வளாகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாவட்ட வளாகம் பெரம்பலூர் என்ற முகவரிக்கு நவ.26. க்குள் வந்து சேருமாறு அனுப்பிவைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை நேரிலோ அல்லது 9360870295 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!