Karunanidhi’s Birthday Celebration on behalf of DMK in Namakkal
நாமக்கல்லில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
நாமக்கல் நகர திமுக சார்பில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. நகர பொறுப்பாளர் மணிமாறன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
சட்ட திருத்தக்குழு உறுப்பினர் நக்கீரன், சென்னிமலை, மாவட்ட மருத்துவரணி பார்த்திபன், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மூர்த்தி, சரவணன், ஈஸ்வரன், பூபதி, ரவீந்திரன், செல்வகுமார், ரவிச்சந்திரன், கமலம், வார்டு செயலாளர்கள் அருள்செல்வன், சரவணன், செவ்வேல், கிருஷ்ணமூர்த்தி, உமாசங்கர், பாஸ்கர், சேகர், மாவட் இளைஞர் அணி நந்தகுமார், நகர இளைஞரணி சதீஷ், மாணவரணி சுரேஷ், சுந்தரவடிவேல் உள்ளிட்ட திரளான திமுகவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.