Laborer found dead near Perambalur!
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அருகே உள்ள பாளையம் – செஞ்சேரி தனியார் பெட்ரோல் பங் அருகே ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேலூரை சேர்ந்த கூலித் தொழிலாளி பழனி மகன் கதிர்வேல் (58) என்பதும் தெரிய வந்தது. வீட்டில் சொல்லாமல் வந்திருப்பதும் தெரியவந்தது. மேலும், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலாளி இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.