Like other districts, Perambalur Cooperative Medicals, Amma Medicals request to take action to benefit the people! 

தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு, மக்களுக்கு பயன்தரும் கூட்டுறவு மருந்தகங்கள், அம்மா மருந்தகங்கள் 15 முதல் 20 வரை தள்ளுபடியில் மருந்துகளை விற்பனை செய்து தனியாருக்கு போட்டியாக செயல்பட்டு, வருகின்றன. ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தில், அதற்கு நேர் எதிராக செயல்படுகிறது.

மெடிக்கல், மருத்துவமனைகள், போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு மீட்பு படையினர், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், இன்டர்நெட் உள்ளிட்ட பல சேவைகள் 24 மணிநேரமும் இயங்கக்கூடியது.

பெரம்பலூரில், ஆளும் கட்சி பிரமுகருக்கு, சொந்தமான மருத்துவமனை ஒன்று 24 மணி நேர மருந்தகம் நடத்துவதுடன், அனைத்து மருந்துகளும், 20 சதவீத தள்ளுபடியில் வழங்குகிறது, ஆனால், பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும், கூட்டுறவு மருந்தகங்கள், அம்மா மருந்தகங்களில், போதுமான மருந்துகள் இருப்பு இருப்பதில்லை. அதோடு, தனியார் மெடிக்கல்களை போல குறிப்பிட்ட நேரத்திற்கு கடைகளை திறக்காமல் கடமைக்கு நடத்தப்படுகிறது.

இதனால், தனியார் மருந்தகங்களில், மக்கள் அதிக விலை கொடுத்து, மருந்துகளை அவசரத்திற்கு வாங்கி செல்கின்றனர். எனவே, பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், கூட்டுறவு மருந்து கடைகள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

பெரம்பலூரில் சிறந்த கூட்டுறவு சங்கம் என பெயர் பெற்ற சங்கம் நடத்தும் அம்மா மருந்தகத்தில், கூட்டுறவு வார விழாவிற்கு முன்பு வரை மருந்துகளே இல்லாத கடையாக திறந்து மூடப்பட்டு வந்தது. அந்த துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்த பின், ரூ. 30 ஆயிரத்திற்கும், பின்னர், ரூ. 53 ஆயிரத்திற்கு ஆர்டகள் கொடுத்து மருந்துகளை வாங்கி வைத்துள்ளனர்.

ஊட்டி, கொடைக்கானல், போன்ற மலைவாசஸ் தலங்களில் கூட கூட்டுறவு நடத்தும், மருந்தகங்கள், அம்மா மருந்தங்கள் மக்கள் ஆதரவை அமோகமாக பெற்றுள்ளன. பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு நிறுவனங்கள், குறிப்பிட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள், பணியாளர்களுக்கு மட்டும் கூடாரமாகி விடக்கூடாது என்றும், இங்கு விருப்பம் இல்லாமல் பணியாற்றும் அதிகாரிகள் பணியாளர்களை வேறு அவர்கள் விரும்பும் இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாடகைக்கு கட்டிடங்கள் எடுத்து மெடிக்கல் நடத்தும் தனியார் 20 சதவீதம் தள்ளுபடி தரும் போது, அரசு ஏன் 30 சதவீதம் ஏன் தரக் கூடாது என பொதுமக்களிடம் கேள்வி எழுந்துள்ளது. அதோடு, மெடிக்கலில் 40 முதல் 60 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

எனவே, கூட்டுறவு மெடிக்கல்கள் தொடர்ந்து 24 மணிநேரமும் இயக்கி மருந்துகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெளி மாநில கூட்டுறவு நிறுவனங்களை பார்த்து நம்ம ஊர் கூட்டுறவு நிறுவனங்கள் வெட்கப்பட வேண்டும். ஏனெனில், அமுல் நிறுவனமும் ஒரு கூட்டுறவு நிறுவனம் தான். அது வடமாநிலத்தில் இருந்து வந்து, தமிழகத்தில் எந்த அளவிற்கு சந்தை வாய்ப்பை பிடித்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே!


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!