Local financial audit assistance office, said the office assistant vaccant
உள்ளாட்சி நிதித் தணிக்கை துறையின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் –
உள்ளாட்சி நிதித்தணிக்கை உதவி இயக்குர் விடுத்துள்ள தகவல் :
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்தை இனச்சுழற்சி முறையில் நிரப்பிட தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பணியிடமானது பொதுப்பிரிவு பொது (முன்னுரிமை) பெற்றவர்களுக்கு இனசுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், ஆனால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவராகவும் இருத்தல் வேண்டும்.
01.07.2016 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 க்கு மிகாமலும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32-க்கு மிகாமலும், ஆதிதிராவிடர், மலைவாழ் வகுப்பினருக்கு 35-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
மேலும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருப்பது கட்டாயமாகும். வாகனம் ஓட்டும் தகுதி பெற்றுள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்தவராகவும் இருத்தல் வேண்டும். இப்பதவிக்கான ஊதிய கட்டு 4800-10000 (தர ஊதியம் ரூ.1300) ஆகும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் உரிய கல்வித்தகுதி சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் பொதுப்பிரிவு பொது (முன்னுரிமை) பெற்றவர் என்ற இனசுழற்சிக்குரிய சான்று நகல்களுடன் தங்கள் விண்ணப்பத்தினை ஒரு வெள்ளைத் தாளில் பெயர், முகவரி, கல்வித் தகுதி மற்றும் வேலை வாய்ப்பக பதிவு எண் போன்ற அனைத்து விபரங்களையும் எழுதி தயாரித்து, அதில் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தினை ஒட்டி உதவி இயக்குநர், உள்ளாட்சி நிதித் தணிக்கை, வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரிக்கு 03.01.02017 மாலை 5.00 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைத்திட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.