Local Government Day : Village and Town Council Meetings held across Perambalur District: Brahmadesam Village led by MLA Prabhakaran!

உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, இன்று பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டமும், பெரம்பலூர் நகராட்சி உள்ளிட்ட 4 பேரூராட்சிகளிலுள்ள அனைத்து வார்டுகளிலும் நகர சபைக் கூட்டமும் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிரம்மதேசம் ஊராட்சியல் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் தலைமையில், நடந்தது. டி.ஆர்.ஓ அங்கையர்கண்ணி உள்ளிடட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் பேசியதாவது:

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை ஒப்பிடும்போது அரியலூரை விட பெரம்பலூர் மாவட்டத்தில் குறைவான எண்ணிக்கையில் காவல் நிலையங்கள் உள்ளன. இது நீண்ட கால பிரச்சனையாக உள்ளது. அதற்காக சட்டமன்ற உறுப்பினர் என்பதன் அடிப்படையில் இந்த பகுதியில் அதிகமான காவல் நிலையங்கள் தேவை என நான் கேட்டுக் கொண்டுள்ளேன். மேலும் வாலிகண்டபுரம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சமஸ்கான் பள்ளிவாசல் மற்றும் வாலீஸ்வரர் சிவன் கோவில் ஆகியவைகளை சுற்றுலா தலங்களாக மாற்ற தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.

முன்னதாக, கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளின் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சார்ந்த தொழில்கள் மற்றும் பண்ணை சாரா தொழில்கள் ஆகியவைகள் குறித்து கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு ஊராட்சி செயலர் வாயிலாக விவரமாக எடுத்து கூறப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ. நிறைமதி, வேப்பந்தட்டை யூனியன் சேர்மன் க.ராமலிங்கம், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் மகாதேவி ஜெயபால், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சீனிவாசன்(பொ), வேளாண்மை இணை இயக்குநர் ச.கருணாநிதி, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் இந்திராணி, பிரம்மதேசம் ஊராட்சி தலைவர் பன்னீர்செல்வம், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!