Maize Nanourea Spraying by Drone: Perambalur Collector Visits!

பெரம்பலூர் மாவட்டம் , வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட நெற்குணம் கிராமத்தில், மக்காச்சோள பயிர்களில் நானோயூரியா டிரோன் மூலம் தெளிக்கும் பணிகளை கலெக்டர் வெங்கடபிரியா நேரில் சென்று பார்வையிட்டார்

நெற்குணம் கிராமத்தில் 1320 எக்டரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறை மற்றும் “இப்கோ” உர நிறுவனத்தின் மூலம் மக்காச்சோள வயலில் “நானோயூரியா” உரம் டிரோன் மூலம் தெளிக்கும் பணிகள் நடந்தது. டிரோன் மூலம் ஒரு ஏக்கர் தெளிப்பதற்கு 5 முதல் 7 நிமிடங்களில் போதுமானது. சாதாரண தெளிப்பில் மருந்து ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால் டிரோன் மூலம் மருந்து தெளித்தால் 10 லிட்டர் தண்ணீர் போதுமானது. மேலும் டிரோன் மூலம் நானோ யூரியா ஏக்கருக்கு 500 மில்லியும், பூச்சிமருந்து எனில் 200 – 250 மில்லியும் தெளித்து பயிர்களை பராமரிக்க முடியும்.

வேப்பந்தட்டை வட்டாரத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிய 25,000 எக்டரில் மக்காச் சோளமும், 2,500 எக்டர் பரப்பளவில் பருத்தியும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் பயிருக்கு மருந்துகள் மற்றும் உரங்களை டிரோன் கருவி மூலம் தெளித்து அதிக அளவில் பயன்பெற வேண்டுமென தெரிவித்தார்.
வேளாண்மைத்துறை அலுவலர்கள், வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!