Man killed Unidentified vehicle collides near Perambalur
பெரம்பலூர் அருகே உள்ள திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கொத்தனார் பலியானர்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீதேவிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (46). பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள ஊத்தாங்காலை சேர்ந்த அன்பழகன் என்பவருடன் அருமடல் பகுதிக்கு வந்து விட்டு மோட்டார்சைக்கிளில் சொந்த ஊருக்கு, திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது, பெரம்பலூர் தீரன் நகர் வாகனத்தை நிறுத்தி விட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.