MGR Centenary on stage visited Rajya Sabha member R, Vaithylingam
தமிழக முன்னாள் முதலசைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் ஆக. 5. அன்று பெரம்பலூரில் நடைபெறுகிறது.
விழா நடைபெற உள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் மேடை அமைத்தல் பணிகளுக்கான முன்னேற்பாடுகளை விழாக் குழுவின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கம் பார்வையிட்டார்.
நூற்றாண்டு விழா நடைபெறும் இடத்தை முழுமையாக சுத்தம் செய்து, அமைச்சர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், பார்வையாளர்கள், பயனாளிகள், அரசு அலுவலர்கள், செய்தியாளர்கள் அமர்வதற்கு எவ்வாறு இடம் ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்பது குறித்தும், விழாவிற்கான பந்தல் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் வாகனங்கள் நிறுத்தவும், நடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களின் வாகனங்களை நிறுத்தவும் தேவையான இடங்கள் உள்ளதா என்றும் பார்வையிட்டார்.
பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக ஏற்படுத்தவும், பாதுகாப்பு கருதி வாகனங்களை எந்தெந்த இடங்களில் நிறுத்துவது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
இந்நிகழ்வின் போது சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி, சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழ்ச்செல்வன், ஆர்.டி.ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.