MGR, Periyar Memorial Day: R.T. Ramachandran MLA, led Garland and honor By AIADMK

அ.இ.அ.தி.மு.க., நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 33-வது ஆண்டு நினைவு நாளையொட்டி பெரம்பலூரில் அதிமுகவினர், மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரன் தலைமையில், பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் முன்னிலையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக பெரியார் நினைவு நாளை முன்னிட்டு அங்கிருந்த அவரது உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதே போன்று அண்ணா, ஜெயலலிதா ஆகியோரது உருவ சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், ஒன்றிய செலாளர்கள் கர்ணன், கிருஷ்ணசாமி, சிவப்பிரகாசம், செல்வக்குமார், சசிக்குமார், ரவிச்சந்திரன், செல்வமணி, உதயம் ரமேஷ், பெரம்பலூர் நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, சிறுபான்மையினர் அணி, அண்ணா தொழிற்சங்கம் வீரபாண்டியன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பரிவு மாவட்ட செயலாளர் கோ.பெருமாள், மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் என்.ராஜ்குமார், ஆலத்தூர் ஒன்றியப் பேரவை இணைச் செயலாளர் டி.செல்வராஜ், ஆலத்தூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குரும்பாபாளையம் சி.நாகராஜன், குரும்பலூர் பேரூர் செல்வராஸ், ஊராட்சித் தலைவர்கள் ஜெமீன்ஆத்தூர் ஜி.சண்முகம், கீழமாத்தூர் கே.பி.ராஜேந்திரன், கோனேரிப்பாளையம் கலையரசி ரமேஷ், எசனை சத்யாபன்னீர்செல்வம், புஜங்கராயநல்லூர் எஸ்.செந்தில்குமார், உள்ளிட்ட ஒன்றியம், நகரம் பேரூர், கிளைக்கழகத்தை பல முக்கிய பிரமுகர்கள், கட்சி முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தின் பல இடங்களில் ஆங்காங்கே எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு பல்வேறு பகுதிகளில் தொண்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இது போன்று, பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களிலும், குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிளலும், எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அதிமுக தொண்டர்கள் எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!