Minibus – two-wheeled vehicle collision: Woman Kills: bus pummeled by villagers near in Perambalur
பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் அருகே தனியாருக்கு சொந்தமான சிற்றுந்தும், இரு சக்கரவாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் பெண் ஒருவர் பலியானர். ஆத்திரமடைந்த கிராம மக்கள் சிற்றுந்தை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 47). இவரது மனைவி சுசீலா ( வயது 42). இருவரும் இன்று காலை சுமார் 10.40 மணி அளவில் பெரம்பலூர் செல்வதற்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது பெரம்பலூரில் இருந்து மேலப்புலியூர் நோக்கி தனியாருக்கு சொந்தமான சிற்றுந்து நாவலூர் கிராமத்தில் வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், ரெங்கராஜ் வந்த இரு சக்கர வாகனமும், தனியார் சிற்றுந்தும் எதிர்ப்பாரத விதமாக மோதிக் கொண்டன. அங்கு அப்போது சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
விபத்தில் இருசக்கர வாகனம் நிலைக்குலைந்து பேருந்தின் பின்பக்கவாட்டு பகுதியில் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் இருந்த சுசீலா தலையில் பலத்த காயம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து கொண்டிருந்த கிராம மக்கள் தனியாருக்கு சொந்தமான பேருந்தை அடித்து நொறுக்கினர். கண்ணாடிகள், இருக்கைகள் பலத்த சேதமடைந்தது.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் விபத்தில் பலியான சுசீலாவின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குரும்பலூரை சேர்ந்த ஓட்டுனர் பிரசாத் (வயது 24) என்பவரை கைது செய்து மேலும், விசாரணை நடத்தி வருகின்றனர்.