Minister Sivashankar inaugurated the Perambalur Sugar Mill’s Current Year Season Grainding!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூரில் உள்ள பொதுத்துறைக்கு சொந்தமான பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவையினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
கடந்த பத்தாண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை 13 நபர்களுக்கு அமைச்சர்வழங்கினார்.
இதிலல் வருவாய் துறையினர், பெரம்பலூர் சர்க்கரை ஆலை தலைமை ரமேஷ், யூனியன் சேர்மன்கள் ராமலிங்கம் (வேப்பந்தட்டை), பிரபாசெல்லப்பிள்ளை (வேப்பூர்), மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் சி.பாஸ்கர், மகாதேவி ஜெயபால், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் ரங்கராஜ், கரும்பு பெருக்கு அலுவலர் பி.ஆனந்தன், வேப்பந்தட்டை வட்டாட்சியர் துரைராஜ், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மற்றும் ஞானமூர்த்தி உள்ளிட்ட அனைத்து கரும்பு விவசாய சங்க தலைவர்கள், பிரதிநிதிகள், வாகன உரிமையாளர் சங்க நிர்வாகிகள், ஆலை தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஐயரை வைத்து முறைப்படி யாகம் நடத்தப்பட்டது.