Minister Sivashankar launched the development project works in Kunnam constituency with an estimate of Rs. 55.32 lakhs!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.42 லட்சம் மற்றும் உள்ளாட்சி பொது நிதியிலிருந்து ரூ.13.32 லட்சம் என ரூ.55.32 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், கலெக்டர் வெங்கடபிரியா முன்னிலையில் இன்று தொடங்கி வைத்தார்.
அத்தியூர் (கிழக்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள கூடுதல் வகுப்பறை கட்டட கட்டுமான பணிகளையும், அத்தியூர் ஊராட்சியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள தார்சாலை பணிகளையும், பெண்ணகோணம் ஊராட்சியில் ரூ.7.5 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள தார்சாலை பணிகளையும், திருமாந்துரை ஊராட்சியில் ரூ.7.5 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள தார்சாலை பணிகளையும், ஊராட்சி பொது நிதியிலிருந்து அத்தியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.5.32 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமையல் கூடத்தினையும், திருமாந்துரை, நோவா நகர் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினையும், அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
இதில் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, கல்வித்துறை பணியாளர்கள், திமுக மாநில ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி, வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன் மற்றும் ஒப்பந்தாரார் அத்தியூர் லெனின், பெண்ணகோணம் ஆறுமுகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.