misusing the woman plan and pudu valvu scheme notify and inform about frauds

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது:

புது வாழ்வுத் திட்டம் மற்றும் மகளிர் திட்டத்தின் பெயர்களை பயன்படுத்தி சில நபர்கள் பண மோசடிகளில் ஈடுபடுவதாக தகவல் வரப் பெற்றுள்ளது. இவர்கள் குறித்து பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும் இவர்கள் தனிநபர் மற்றும் சுய உதவிக் குழுக்களை சந்தித்து கல்வி, வாகனம், வீடுகட்ட, நிலம் வாங்க மற்றும் தொழில்கடன் போன்றவற்றிற்கு குறைந்த அளவு வட்டியில் கடன் பெற்று தருகிறோம் என தெரிவித்து, அதற்கு ஆய்வு கட்டணமாக ரூ.300 முதல் ரூ.500 வரை வரை வசூலித்து பண மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிய வந்துள்ளதையடுத்து இது போன்ற நபர்கள் குறித்து பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இவ்வாறு பண மோசடிகளில் ஈடுபடுவோர் குறித்து புகார் அளிப்பதற்கு ஏதுவாக ஆலத்தூர், வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டாரப் பகுதிகளை சார்ந்தவர்கள் புது வாழ்வுத் திட்ட அலுவலகத்தை 04328-225133 என்ற எண்ணிலும், பெரம்பலூர் வட்டாரப் பகுதிகளை சார்ந்தவர்கள் மகளிர் திட்ட அலுவலகத்தை 04328-225362 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பண மோசடிகளில் ஈடுபடுவோர் குறித்து தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!