Murder threat to AIADMK Personality: complaint with SP of Namakkal district

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நெசவாளர் காலனியை சேர்ந்தவர் சின்னதுரை (40). இவர் நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பி அருளரசுவிடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

நான் கார் மெக்கானிக் தொழில் செய்து வருகிறேன். அ.தி.மு.க.வில் திருச்செங்கோடு நகர மாணவர் அணி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறேன். தற்போது மத்திய அரசின் உத்தரவுபடி கேபிள் ஒளிபரப்பு சேவையில் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் இணைப்பு வழங்க அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை போலவே, பல தனியார் நிறுவனங்களுக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அங்கீகாரம் வழங்கி உள்ளது.

அவ்வாறு மத்திய அரசால் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் நிறுவனத்தில், நான் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் கேபிள் இணைப்பு சேவை வழங்க, திருச்செங்கோடு தாலுகா பகுதிக்கு பிரதிநிதியாகவும், பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளேன்.

அந்த அடிப்படையில் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் கேபிள் இணைப்பு சேவை வழங்க நான் சக தொழிலாளர்களுடன் திருச்செங்கோட்டில் உள்ள சேலம் ரோடு வழியாக வயர்களை கொண்டு செல்லும் வேலையை செய்து கொண்டு இருந்தேன். அப்போது என்னை தொடர்பு கொண்ட ஒருவர், கேபிள் வயர் எதுவும் கொண்டு செல்ல கூடாது எனவும், மீறினால் தாசில்தாரை வைத்து உன் மீது போலீசில் பொய் புகார் கொடுப்போம் என்றும், வயர்களை வெட்டிவிடுவோம் எனவும் மிரட்டினார்.

பின்னர் நேரிலும் சிலர் கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!